சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகையை காதலித்து கழட்டிவிட்ட நாக சைதன்யா? தீயாய் பரவும் தகவல்!
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நாக சைதன்யா.சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் கஸ்டடி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இவர் கடந்த 2017 -ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு. இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் பிரேக் அப் செய்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.