நாக சைதன்யாவின் தாய்க்கு இரண்டாம் திருமணம் ஆகிவிட்டதா.. அவருடைய கணவர் யார் தெரியுமா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாளாவுடன் மறுமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனாவும் தனது முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில்.
நாக சைதன்யா முதல் மனைவி லட்சுமியின் மகன் ஆவார். இந்த நிலையில், விவாகரத்து பெற்ற நாகர்ஜுனா நடிகை அமலாவை மறுமணம் செய்துகொண்டதை அனைவரும் அறிவோம், ஆனால் லட்சுமியும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை நம்மில் பலருக்கும் தெரியாது.
ஆம், நாக சைதன்யாவின் தாய் லட்சுமி தனது விவாகரத்துக்கு பின் இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரீராம் மோட்டார்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் சரத் விஜயராகவனை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாராம்.
திருமணத்துக்கு பின்னர் லட்சுமி தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாராம். சமீபத்தில் நடந்த நாக சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்தத்திற்கு தனது கணவருடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார்.