விவாகரத்துக்கு பின் இந்த நடிகையுடன் டேட்டிங்கா? உண்மையை கூறிய சம்ந்தாவின் மாஜி கணவர்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அப்போது ஆரம்பித்த நம்பி கடைசியில் காதலாக மாறி இரு குடும்பத்தினர் முன்னிலையில் 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சமந்தா - நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் இருவரும் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதையும் கூறாமல் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து நடிகை சோபிதா துலிபுலாவுடன் ரகசிய தொடர்பில் இருந்து வருவதாகவும் இருவரும் டேட்டிங்கிற்காக அங்கும் இங்குமாக சென்று வருவதாகவும் இணையத்தில் செய்திகள் கசிந்தது.

இதையெல்லாம் நடிகை சமந்தா தான் மறைமுகமாக இருந்து கொண்டு பரப்பி வருகிறார் என்ற செய்திகளும் வெளியானது. இந்நிலையில் சோபிதாவை காதலிப்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் நாக சைதன்யா. இதை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று ஒன்றை பதிலை அளித்திருக்கிறார்.
இந்த ரியாக்ஷனை பார்க்கும் போது இதற்கான பதிலை கூறவிரும்பவில்லையா? அல்லது ஏதாவது சொன்னால் அந்த விசயம் அப்படியே தொடர்ந்து விடும் என்ற பயத்தில் எதுவும் கூறவில்லையா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.