விவாகரத்துக்கு பின் அந்த நடிகையுடன் ஓட்டலில் சிக்கிய நாக சைதன்யா!! வைரலாகும் லீக் புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. ஜோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பிரபலமான நாக சைதன்யா தன்னுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகளான நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நாக சைதன்யா வேறொரு திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று டேட் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
தற்போது லண்டனில் இருக்கும் ஒரு பாரில் சோபிதாவுடன் நாக சைதன்யா டின்னர் சாப்பிட்டு ஓட்டல் செஃப் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்திற்காக லண்டன் ஷூட்டிங்கின் போது இருவரும் எடுத்த பழைய புகைப்படம் தான் அது என்று நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.