சமந்தாவுடன் தோற்று சோபிதாவுடன் ஜெயித்த நாக சைதன்யா!! எந்த விஷயத்தில் தெரியுமா? வீடியோ..
நாக சைதன்யா - சோபிதா
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017ல் காதலித்து திருமணம் செய்து 2021ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பின் விவாகரத்து பெற்றார். அதன்பின் நடிகை சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து வருவதாகவும் வெளிநாட்டில் அவுட்டிங் சென்று சந்திக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடத்தி வைத்திருக்கிறார் நடிகர் நாகர்ஜுனா. இருவரும் டிசம்பர் மாதம் கல்யாணம் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த 4 ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சமந்தா வைரல் வீடியோ
இந்நிலையில் திருமணம் முடிந்ததும் மணமக்கள் இடையே விளையாட்டு கொண்டாட்டம் நடக்கும் நிகழ்வு நடந்துள்ளது. அதில் குடத்தில் மோதிரம் எடுக்கும் போட்டியில் நாக சைதன்யா வெற்றிப்பெற்றுள்ளார்.
இணையத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகையில், நெட்டிசன்கள் அதற்கு பதிலடியாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் நடந்த திருமணத்தின் போது இந்த போட்டி நடந்துள்ளது.
அதில் நடிகை சமந்தா தான் மோதிரத்தை எடுத்து வெற்றிப்பெறுவார். சமந்தாவிடம் தோற்றுப்போன நாக சைதன்யா சோபிதாவிடம் ஜெயித்துவிட்டார் என்று சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Bro learned from his failure pic.twitter.com/Ha1nizWSBW
— 𝚅𝚊𝚖𝚜𝚒 𝙾𝙶⛩️ (@Artos_Thagudham) December 6, 2024