நான்கு வருட திருமண வாழ்க்கை! முடித்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா!

samantha Naga Chaitanya
By Jeeva Oct 02, 2021 10:36 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா - நாக சைதன்யவாக தான் இருக்க முடியும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் தற்போது பிரிந்துள்ளனர்.

இவர்களின் பிரிவு குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், இருவரும் தனித்தனியே அளித்த பேட்டியில் அதனை மறுத்து வந்தனர்.

ஆனால் தற்போது அவர்களே பிரிவதாக அறிவித்துள்ளது, சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.