குண்டு ஆகிவிட்டால் விலகி விடுவேன்.. திருமணத்திற்கு முன் நாகார்ஜுனா கண்டிஷன்!
நாகார்ஜுனா
அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நாகார்ஜுனா 1986ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்ததாக இவருடைய 100வது திரைப்படம் உருவாகவுள்ளது.
நாகார்ஜுனா முதலில் நடிகை வெங்கடேஷின் தங்கையான லட்சுமியை திருமணம் செய்துகொண்டார். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இப்படி சொன்னாரா?
இந்நிலையில், அமலாவை திருமணம் செய்வதற்கு முன் நாகார்ஜுனா போட்ட கண்டிஷன் குறித்து நடிகை குட்டி பத்மினி அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அதில், " திருமணத்துக்கு பின்பு குண்டு ஆகக்கூடாது. குழந்தை பெற்றாலும் குண்டு ஆகக்கூடாது. அப்படி ஆகிவிட்டால் நான் உன்னை விட்டு சென்று விடுவேன். மேலும், எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும்" என்று அமலாவிடம் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.