திருமணத்திற்கு முன் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்து தப்பித்தேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் நகுல்..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003ல் வெளியான பாய்ஸ் படத்தில் ஜுஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் நகுல். ஆரம்பத்தில் குண்டான தோற்றத்தில் இருந்த நகுல் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அதன்பின் 5 ஆண்டுகளுக்கு பின் காதலில் விழுந்தேன் என்று சூப்பர் ஹிட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா.காம், செய் போன்ற படங்களில் நடித்து வந்தார். இசை மீது அதிக ஈர்ப்பை கொண்ட நகுல் பல தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார்.
தேவயானியின் தம்பியாக சினிமாவில் ஜொலித்து வரும் நகுல், நீண்டநாள் காதலியான ஸ்ருதி என்பவரை 2016ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு அப்பாவானார். சமீபத்தில் தன் மனைவி ஸ்ருதியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சில விசயங்களை ஓப்பனாக பேசியிருக்கிறார்.
ஸ்ருதியை 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்தோம். உண்மையாக சொல்லனும் என்றால், ஸ்ருதியை காதலிக்கும் முன்பே மிகவும் மோசமானவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.
அதுவும் மிகவும் சிக்கலாக இருந்தது. அதன்பின் வேண்டாம் சாமி என்று அவரைவிட்டு விட்டேன். நகுலுக்கு இவங்க தான் சரியாக இருப்பார்கள் என்று ஸ்ருதி அமைந்துவிட்டார் என்று நகுல் தெரிவித்துள்ளார்.