கைக்குழந்தையுடன் நைட்டி அணிந்து நடிகர் நகுல் செய்த செயல்! ஷாக்காகும் ரசிகர்கள்..

baby supersinger Nakkhul Sruti Nakul
By Edward Jun 29, 2021 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் நகுல். பின்னணி பாடகராக திகழ்ந்து வந்த நகுல், கதாநாயகனாக காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகினார்.

ஓரளவிற்கு வெற்றியையே கண்டு வந்த நகுல் ஆரம்பத்தில் அன்னியன், கஜினி, வல்லவன், வல்லினம் உள்ளிட்ட படங்களில் பாடலும் பாடி அசத்தியுள்ளார். படவாய்ப்புகள் அமையாத நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த 2016ல் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவரின் மனைவி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதை புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் , மனைவியில் நைட்டியை அணிந்து மகள் அகிராவை தூக்கியபடி ஆண்களும் குழந்தைகளை கவனிக்க அழகாக இருப்பார்கள் என்று ஸ்ருதி புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இதைபார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியும் பாராட்டியும் வருகிறார்கள்.