ஜோசியத்தை நம்பி பிரபல நடிகையை விவாகரத்து செய்த நடிகர்
Ramarajan
By Yathrika
நளினி-ராமராஜன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் நளினி-ராமராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை 13 வருடங்களில் முடிவுக்கு வந்தது.
சமீபத்தில் தனது மகள் மற்றும் மகன் திருமண விசேஷங்களில் ஒன்றாக கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை நளினி பேசும்போது, 7 ஜென்மம் எடுத்தாலும் எனக்கு கணவராக அவர் மட்டுமே வர வேண்டும்.
ஜோசியத்தை நம்பி தான் என்னை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்யும் போது கூட எனது கையை பிடித்துக்கொண்டு தான் இருந்தார் ராமராஜன் என தனது முன்னாள் கணவர் குறித்து பேசியுள்ளார்.