நமீதா பிரசவத்திற்கு பின் இப்படி மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல்
Namitha
By Parthiban.A
நடிகை நமீதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் கிளாமரான ரோல்களில் நடித்து இருக்கிறார் அவர். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
பிக் பாஸுக்கு பிறகு நமீதா அவரது காதலரை திருமணம் செய்துகொண்டார். நமீதா அதன் பின் கர்ப்பமாக இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அவர் தற்போது குழந்தை உடன் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். நமீதா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்து தெரிவித்து வருகின்றனர்.
