5 வருடம் கழித்து 41 வயதில் கர்ப்பமான நடிகை நமீதா! கர்ப்பத்தை மறைக்க இதுதான் காரணாமா?

Namitha Bigg Boss Indian Actress
By Edward May 10, 2022 06:55 AM GMT
Report

வட இந்தியாவை சேர்ந்த மாடல் நடிகையாக தமிழில் கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக எங்கள் அண்ணா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இதன்பின் சரத்குமாருடன் ஏய், சத்யராஜுடன் கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களில் நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.

அதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நமீதா நான் அவன் இல்லை, பில்லா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகும் நிலைக்கும் வந்தார். ஆனால் படவாய்ப்புகள் கிடைக்காமல் திணறும் போது பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2017ல் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உடல் எடையை குறைக்க ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ள செய்தியை அவரது 41 வது பிறந்தநாளன்று அறிவித்துள்ளார். கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGallery