மிருணாள் தாகூருடன் இத்தனை முத்த காட்சிகள்.. நடிகர் நானி ஓபன் டாக்
நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹாய் நான்னா. இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 7 -ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நானி சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம், 'படத்தின் டீசரில் இவ்வளவு முத்தக்காட்சிகள் இருக்கிறதே? அப்போ படத்தில் எவ்ளோ முத்த காட்சிகள் இருக்கும்' என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நானி, இது 2023, 20 வருடங்களுக்கு முன்னதாக, லைட் ஆப் செய்தாலே போதும் குழந்தை பிறந்து விடும் என்று எண்ணினார்கள்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. நாம் நமது காதலியை, மனைவிக்கு முத்தம் கொடுக்கிறோம். ஆனால் ஏன் அதனை திரையில் பார்க்க மறுக்கிறோம்
அந்த காலகட்டத்தில் முத்த காட்சி சமயத்தில் மரம், பூக்கள் வைத்து மறைப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அந்த மாதிரி எடுத்தால் ஒர்க் அவுட் ஆகாது என்று நானி கூறியுள்ளார்.