நான் காதலிக்கவில்லை..திருநங்கை பப்ளிசிட்டிக்காக பண்றாங்க!! நாஞ்சில் விஜயன் விளக்கம்...
திருநங்கை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகர் நாஞ்சில் விஜயன். ஒருசில படங்களில் நடித்து வரும் நாஞ்சில் விஜயன், சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் திருநங்கை ஒருவர் அவர்மீது பாலியல் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நாஞ்சில் விஜயன் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். திருநங்கையின் குற்றச்சாட்டு கூறி 2 நாட்களாகியப்பின் நாஞ்சில் விஜயன் ஒரு வீடியோவை பகிர்ந்து அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
நாஞ்சில் விஜயன் விளக்கம்
அதில், திருநங்கையை தான் சகோதரியாக பார்த்து பழகியதாகவும், லிவிங் டுகெதரில் வாழ்ந்ததாக கூறுவது உண்மையல்ல என்றும் கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பில் இருந்தே அவரை தெரியும், நன்றாக வேலை செய்பவர், உழைப்பாளி, என்னுடைய குழுவில் இணைந்து பணியாற்றியவர்.
திருமணத்திற்கு பின் அடிக்கடி இரவில் கால் செய்து செல்போனில் மெசேஜ் அனுப்பி தன்னை டார்ச்சர் செய்தார். வட்டிக்கு காசு கொடுக்கும் திருநங்கை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தனக்கு மூன்று லட்சம் கொடுத்ததாக கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.
நான் திருநங்கையை காதலித்தேன் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? இது வெறும் பப்ளிசிட்டிக்காக பண்ணக்கூடிய ஃபைட் என்று குற்றம்சாட்டியுள்ளார்.