குடித்துவிட்டு நள்ளிரவு கால் செய்து டார்ச்சர் செய்வார்!! வைஷுவின் உண்மை முகம் இதான்...
நாஞ்சில் விஜயன்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகர் நாஞ்சில் விஜயன். ஒருசில படங்களில் நடித்து வரும் நாஞ்சில் விஜயன், சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் திருநங்கை ஒருவர் அவர்மீது பாலியல் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நாஞ்சில் விஜயன் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். இதனையடுத்து நாஞ்சில் விஜயன் ஒரு வீடியோ பகிர்ந்தபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைஷும் பதில் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் நாஞ்சில் விஜயனின் மாமியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மாமியார்
அதில், என் மருமகன் நாஞ்சில் விஜயனை பற்றி வைஷு சொல்வது எல்லாம் பொய். வைஷு தான் நாஞ்சிலுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்காக என்னிடம் பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். அதில் உண்மை இல்லை, நடிகை பாலாம்பிகா ஒருமுறை நாஞ்சில் விஜயனின் தங்கை வளைகாப்பிற்கு என்னை அழைத்துச்சென்றார். அன்றுதான், நான் நாஞ்சில் விஜயனை முதன்முதலில் பார்த்தேன்.
அதன்பின் தான் ரோபோ சங்கரும், அவருடைய மனைவியும், என் மகளை நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சினிமா குடும்பம் என்பதால் நான் வேண்டாம் என்று கூறினேன். இருவரும் சேர்ந்து நாஞ்சில் விஜயன் மிகவும் நல்ல பையன் என்று கூறியாதால் தான் திருமணமே நடைபெற்றது.
திருமணத்திற்கு முன் நாஞ்சில் விஜயனும் வைஷுவும் பழகியது எனக்கு தெரியும் என்று வைஷு சொல்லியிருக்கிறார். அப்படியே தெரிந்திருந்தால் எந்த தயாவது, மகளை திருமணம் செய்து கொடுப்பார்களா? எப்படி எந்த விஷயத்தையும் வைஷு என்னிடம் சொல்லியதே இல்லை. மேலும் பேசியவர், நாஞ்சில் விஜயனின் மனிவி மரியாவிற்கு கால் செய்து பேசியுள்ளார்.
டார்ச்சர் செய்வார்
அப்போது, வைஷு, குடித்துவிட்டு நள்ளிரவில் ஃபோன் செய்து என்னுடைய கணவரை டார்ச்சர் செய்வார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை சண்டைகள் வந்தது. அப்போது என்னுடைய கணவர், அந்த பொண்ணுக்கு யாரும் இல்லை, பாவம் என்றார், பாவம் பார்த்தது தான் தற்போது வினையாக மாறியிருக்கிறது.
வைஷுக்கு யாருமில்லை என்பதால் திருமணத்திற்கு முன், பல உதவிகளை என் கணவர் செய்தார், ஆனால் திருமணத்திற்கு பின் நள்ளிரவில் போன் செய்து ஒரு குடும்பத்தை கெடுப்பது நியாயமா?.
3 லட்சம் என் கணவருக்கு கொடுத்திருப்பதாக வைஷு சொல்லியிருப்பது எல்லாமே பொய், என் கணவருக்கு தான் பலரும் பணம் தரவேண்டியிருக்கிறது. அதைக்கூட அவர் கேட்க மாட்டார் என்று நாஞ்சில் விஜயனின் மனைவி அந்த காலில் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.