சூர்யாவை கேவலப்படுத்திய இயக்குனர்!! பல வருடத்திற்கு பின் வாய்த்திறந்த தயாரிப்பாளர்..
பிரபல இயக்குனர் அமீர், சமீபத்தில் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பற்றி சர்ச்சையாக பேசிய விசயம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து ஞானவேல் ராஜா அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் அமீரின் சுயரூபங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
2016ல் இருந்து அமீர் எங்களை தரக்குறையாக பேசிது குறித்து நாங்கள் வேய் திறக்காமல் இருந்துக்கிறோம். அமைதியாக இருக்க காரணம் சிவக்குமார் சார் தான்.
அமீர் இப்படி பேசியது குறித்து அவரிடம் கூறியதும் நீயும் சினிமாவில் இருக்க போற, அமீரும் சினிமாவில் இருக்க போறான். அவரை தப்பா பேசாதே, இருவரும் யார் நல்லவர்கள் என யாரிடம் நிரூபிக்க போகிறீர்கள். உன் இயக்குனரை, எங்கும் காயப்படுத்தி பேசிவிடாதே என்றும் கூறினார்.
தற்போது பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகளானதால் அப்படத்தினை ரீரிலிஸ் செய்தோம். அப்போது அமீரிடம் 8 மணிநேரம் பேசியதில் 6 மணிநேரம் என்னை திட்டியும் குடும்பத்தையும் திட்டி பேசினார்.
நான் ஒரேவொரு கேள்வி கேட்டேன், நான், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் எல்லோரும் கெட்டவர்கள், ஆனால் இன்றும் எங்களால் சினிமாவில் இருக்க முடியுதே, உங்களை எல்லோரும் பார்த்து தெறித்து ஓடுகிறார்களே என்று கேட்டதாகவும் கூறினார். மேலும் சூர்யாவை நந்தா படத்தில் கேவலமாக நடத்தினார் அமீர்.
சண்டை முற்றிப்போய், பேச்சுவார்த்தையே இல்லாமல் போனதாகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு சூர்யா கூட வரவில்லை என்றும் தெரிவித்தார். வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சண்டை போட்ட சூர்யா அண்ணனையே, அவர் கொச்சைப்படுத்தியதாகவும் ஞானவேல் ராஜா கேட்டுள்ளார்.