மூத்த நடிகர் என்றும் பார்க்காமல் அவமானப்படுத்திய விஜய்.. 15 வருடமாக ஒதுக்கி வரும் நடிகர் நெப்போலியன்

Vijay Gossip Today
By Edward Nov 22, 2022 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முரட்டு வில்லனாக இருந்தும் கதாநாயகனாக திகழ்ந்து 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியன். முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுடன் பணியாற்றிய நெப்போலியன் மகனின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவில் செட்டிலாகி அங்கேயே சினிமா வேலைகளை பார்த்தும் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தனியார் பேட்டியொன்றில் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது விஜய் படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் அந்த காயம் இன்னும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அன்னைக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி தான் பேசினேனே தவிர அதன்பின் அவரை பார்க்கவில்லை அவர் படத்தை பார்க்கவில்லை.

தானு சார் ஒருமுறை விஜய்யுடன் நடிக்க கேட்டார். ஆனால் வேண்டாம், மீண்டும் ஷூட்டிங்கில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று கூறினேன்.

மேலும், மத்தபடி விஜய்யுடன் சண்டை போடனும் என்பது எனக்கு தேவையில்லாத ஒன்று, விஜய் கேட்டால் நான் நடிக்க தயார் தான். சூழ்நிலையும், நடத்தையும் தான் அப்படி விஜய்யை நடக்கவைத்தது. அதை தவிர்த்திருக்கலாம் என்று நெப்போலியன் கூறியுள்ளார்.

Gallery