வீடியோ காலில் நடந்து முடிந்த நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் நிச்சயம்!! மருமகள் யார் தெரியுமா..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சில ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். உடல் நிலை சரியில்லாத அவரது மகனுக்காக அமெரிக்காவில் பல தொழில்களை ஆரம்பித்து நல்ல ஒரு தந்தையாக பெயர் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் 25 வயதான மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார். நிச்சயம் நடக்கவுள்ளதால் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் நெப்போலியன் கொடுத்திருந்தார். தற்போது நெப்போலியன் மகன் தனுஷ்-க்கும் அக்ஷயா என்பவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளது.
நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகாந்தர் என்பவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மகன் தனுஷ் வீடியோ காலில் இருக்க இரு குடும்பத்தினரும் நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார்கள்.


