பட வாய்ப்பு இல்லாததால் நாட்டாமை டீச்சர் எடுத்த முடிவு.. என்ன தெரியுமா?

Tamil Actress
By Dhiviyarajan Jan 27, 2023 04:13 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் சரத்குமார் நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளிவந்த நாட்டாமை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வரும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராணி.

இந்த காலகட்டத்திலும் நாட்டாமை டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் அளவிற்கு இவரின் நடிப்பு பேசப்பட்டிருந்தது. இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ரீ-என்ட்ரி

இவர் என்ன தான் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் அமையவில்லை.

இந்நிலையில் ராணி, சின்னத்திரையில் தடம் பாதிக்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீதாராமன் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் இவரின் ரீ-என்ட்ரியை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.