நவரச நாயகன் கார்த்திக் உடல்நிலை சரியில்லையா?வைரலாகும் வீடியோ..
நவரச நாயகன் கார்த்திக்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகரானார்.
குறுகிய காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்து நவரச நாயகன் என்ற புகழையும் பெற்றார். உச்சத்தில் இருந்த கார்த்திக் திடீரென சரிவை சந்திக்க மது பழக்கம் காரணமாக அமைந்ததாம். பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கார்த்திக்கின் கால்ஷீட்டை நம்பி பல லட்சம் ஏமாந்து இருக்கிறார்கள்.

கார்த்திக் பற்றி சமீபகாலமாக பல பிரபலங்கள் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு நுரையீரல் தொடர்பான சில சிறிய உடல்நலக்குறைவுகள் இருந்தது.
அதற்காக சிகிச்சையும் எடுத்துக்கொண்டதாகவும் சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உடல்நிலை சரியில்லையா
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்திக்கின் உடல்நிலை குறித்து போலியான செய்திகள் பரவியது. இதுகுறித்து அவரது மகன் கெளதம் கார்த்திக் விளக்கமும் கொடுத்திருந்தார்.
தற்போது நடிகர் கார்த்திக், தன்னுடைய வீட்டில் நின்றபடி சேரை தூக்கி எறிந்து கோட்-சூட் அணிந்த நிலையில் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.