நீங்களும் மனுஷங்கதானே..ஏன் இப்படி செய்றீங்க..அதுபோதாதா!! நவரச நாயகன் ஆதங்கம்...
நவரச நாயகன்
80, 90களில் கொடிக்கட்டி பறந்த தமிழ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நவரச நாயகன் என்று புகழ்ப்படும் கார்த்திக். கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அவர் பற்றிய பேச்சுக்கள் அதிகம் பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன், கார்த்திக் பற்றி பேசியது தான்.

இந்த விவகாரம் முடிந்த கையோடு கார்த்திக் உடல்நிலை சரியில்லை, வீல் சேரில் இருக்கிறார் என்று கூறி வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் மறுத்தார். நவரச நாயகன் இதற்கு பதிலடி கொடுக்க கம்பு சுற்றும்படியான வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுபோதாதா
இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், சந்தோஷத்தோடு இருக்க வேண்டிய இந்த பூமியை எப்படியாவது கெடுத்துவிடவேண்டும் என்று முடிவோடு சிலர் இருக்கிறார்கள், எந்த பூமி அவர்களை உருவாக்கியதோ? அதை பாம் போட்டு அழிக்கிறார்கள்.
நியூக்ளியர் பட்டனை எப்படியாவது அழுத்திவிட வேண்டும் என்று வெளிநாட்டு தலைவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் ஏன்? எல்லாமே எங்கே நல்லா இருக்கு. நான் மட்டும் அனுபவித்தால் போதுமா? முன்னோர்களும் அனுபவித்தார்கள்.
போர்களை எல்லாம் விடுங்கம் எதிர்கால சந்ததியினரும் இந்த பூமியை அனுபவிக்க வேண்டும்தானே, அந்த எண்ணம் ஏன் வரவில்லை. எதற்காக அணுகுண்டுகளை எல்லாம் கண்டுபிடிக்கிறீர்கள். 2வது உலகப்போர் ஒன்று போதாதா? ஹிரோஷிமாவில் ஒன்று, நகசாகியில் ஒன்று, அதெல்லாம் கொடுமை, மீண்டும் அதை நோக்கித்தான் போகிறார்கள். நீங்களும் மனிதார்கள்தானே, ஏன் இப்படி செய்கிறீர்கள், இதையெல்லாம் விடுங்கப்பா என்று கூறியிருக்கிறார்.