நயன்தாராவை நேரில் சென்று திட்டிய பிரபுதேவாவின் முதல் மனைவி! உண்மை உடைத்த பிரபலம்..

ladysuperstar nayanthara prabhudeva ramalath
By Edward Aug 31, 2021 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து பல லட்ச ரசிகர்களை தன் படத்தினால் ஈர்த்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

இந்நிலையில் நயன் தாரா ஒரு காலகட்டத்தில் நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால் சில காரணங்களால் விட்டி பிரிந்து விட்டார். அதற்கு என்ன காரணம் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பிரபுதேவா சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன.

நடன இயக்குநரி அதிக சம்பளம் வாங்கிய ஒருவர் இவர் தான். ஆனால், நயன்தாராவால் நடனத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நயன்தாரா பிரபுதேவா மேல் இருந்த அளவுக்கதிகமான காதலால் எதையும் இழக்க தயாராக இருந்தாராம். இந்துவாக மாறி அவர் பெயரை கையில் பச்சையும் குத்தினார் நடிகை நயன்தாரா. ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் நயன்தாராவை நேரில் சந்தித்து கடுமையாக திட்டியுள்ளாராம்.

இரு குழந்தைகள் இருக்க திருமணமானவருடன் ஏன் இப்படி என்றெல்லாம் கேட்டு வந்ததால் யோசித்த நயன் தாரா பிரபுதேவாவுடன் இருந்த காதலை முறித்துக்கொண்டு விலகினாராம், தற்போது ரமலத்துடன் பிரபுதேவா ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பயில்வான்.

இதையடுத்து தனிமையில் இருந்து கஷ்டத்தில் இருந்த நயன் தாராவிற்கு ஆறுதல் அளித்து வந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்று லேடி சூப்பர் ஸ்டாரே பல இடங்களில் குறிப்பிட்டு இருப்பார்.

குறித்த வீடியோவை பார்க்க க்ளிக் செய்க..