8 வயது மூத்த நடிகையுடன் உறவில் இருந்தாரா ஹர்திக் பாண்டியா!! நடிகையே சொன்ன உண்மை...

Hardik Pandya Bollywood Indian Actress Indian Cricket Team Relationship
By Edward Jul 03, 2025 09:30 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரராக திகழ்ந்து, ஐபிஎல், டெஸ்ட், டி20, ஓடிஐ போட்டிகள் என பல போட்டிகளில் இறங்கி அதிரடியாக ரன் அடித்து அசத்தி வருபவர் தான் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி நடாஷாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.

8 வயது மூத்த நடிகையுடன் உறவில் இருந்தாரா ஹர்திக் பாண்டியா!! நடிகையே சொன்ன உண்மை... | Esha Gupta On Hardik Pandya Dating Rumours

கர்ப்பமான பிறகுதான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கிடைக்கும் நேரத்தில் தன் மகனுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். ஹர்திக் பாண்டிய வேறொரு மாடல் நடிகையுடன் டேட்டிங் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

8 வயது மூத்த நடிகையுடன் உறவில் இருந்தாரா ஹர்திக் பாண்டியா!! நடிகையே சொன்ன உண்மை... | Esha Gupta On Hardik Pandya Dating Rumours

39 வயதான ஈஷா குப்தா, ஹர்திக் பாண்டியாவை டேட்டிங் செய்ததாக ஒரு தகவல் பரவி வந்தது. ஹர்திக் பாண்டியாவை விட 8 வயது பெரியவராக இருக்கும் ஈஷா குப்தா, இதுகுறித்து முதன்முறையாக பேசியிருக்கிறார்.

ஈஷா குப்தா

அதில், தாங்கள் 2 மாதங்கள் பேசிக்கொண்டு மட்டும் இருந்ததாகவும், இது 2018 காலக்கட்டத்தில் நடந்ததாகவும் பேசியுள்ளார். மேலும் இது ஒரு உறவாக மாறிவில்லை, ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இருவரும் சந்தித்திருக்கிறோம் என்றும் அதை தவிர வேறு எதுவும் தங்களுக்குள் நடக்கவில்லை.

8 வயது மூத்த நடிகையுடன் உறவில் இருந்தாரா ஹர்திக் பாண்டியா!! நடிகையே சொன்ன உண்மை... | Esha Gupta On Hardik Pandya Dating Rumours

தங்களுக்குள் இருந்தது, உறவாக மாற வாய்ப்பிருந்ததாகவும் ஆனால் ஒற்றுமை இல்லாததால் அது ரிலேஷன்ஷிப்பாக மாறவில்லை, இதைத்தாண்டி வேறு எந்த டிராமாவும் நடக்கவில்லை என்றும் நடிகை ஈஷா குப்தா தெரிவித்துள்ளார்.