ஆடையின்றி ரசிக்கும் இளைஞர்! மிரட்டும் நயன் தாராவின் நெற்றிக்கண் டிரைலரால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Vignesh Shivan nayantara Netrikann Milind Rau
By Edward Aug 01, 2021 05:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. குறுகிய காலகட்டத்தில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வரும் நயன் கதாநாயகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி தன் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பேபி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கண் தெரியாத பெண் போல நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

சைகோ கொலைக்காரன் அஜ்மலை, பார்வையற்ற நயன்தாரா எப்படி எதிர்கொண்டு, அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை என்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். மேலும் 1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.