நயன்தாராவிற்கும் பிக்பாஸ் 4 பிரபலத்திற்கும் இந்த உறவா! லீக்கான பார்ட்டி புகைப்படம்..

nayantara biggbosstamil4 samyuktha vignesh shivan
By Edward May 16, 2021 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு பல கஷ்டங்களைத் தாண்டி வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில், சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி ஐயா, சந்திரமுகி உள்ளிட்ட பட வெற்றியால் பிரபலமானவ்ர் நடிகை நயன்தாரா.

தற்போது பல படங்களில் நடித்து வரும் நயன் சில கிசுகிசு, காதல் சர்ச்சையிலும் சிக்கி வந்தார். இதை கண்டுகொள்ளாமல் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார். இரு காதல் தோல்விக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 5 வருடங்களுக்கு மேல் காதலில் இருந்து வருகிறார்.

கூடிய சீக்கிரமே விக்னேஷ் சிவனை கரம்பிடிக்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதியில் திருமணம் உறுதி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தாவும் நயன் தாராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நயன்தாராவிற்கு நெருங்கி தோழியாக சம்யுக்தா இருந்துள்ளார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாளில் கலந்து கொண்டு நயன் தாராவுடன் சேர்ந்தும் இருந்துள்ளார் சம்யுக்தா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGallery