மெகா சூப்பர் ஸ்டார் படத்துக்காக இத்தனை கோடி சம்பளமா? எல்லாம் இரட்டை குழந்தை வந்த ராசி....

Nayanthara Chiranjeevi Salman Khan
By Edward Oct 20, 2022 08:41 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்த காட் ஃபாதர் படத்தில் முக்கிய ரோலில் லேடி சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி நான்கே நாளில் 100 கோடி அளவில் வசூலித்திருந்ததாம் .

மெகா சூப்பர் ஸ்டார் படத்துக்காக இத்தனை கோடி சம்பளமா? எல்லாம் இரட்டை குழந்தை வந்த ராசி.... | Nayanthaara Paid Salary For God Father Movie

இந்நிலையில் இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மெகா சூப்பர் ஸ்டாருக்கு 40 கோடியும், சல்மான் கானுக்கு ஆரம்பத்தில் 20 கோடி சம்பளமாக பேசப்பட்டது.

ஆனால் சிரஞ்சீவி மீது கொண்ட அன்பால் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறாராம் சல்மான் கான்.

நயன்தாரா இரட்டை குழந்தை பெறும் சமயத்தில் வெளியாகி ஓடிய முதல் படம் இப்படம் தான். இப்படத்திற்காக 4 கோடி சம்பளமாக நயன்தாரா பெற்றுள்ளார். இதனை அடுத்து ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெறவுள்ளார்.