ஆடி மாசம் ஆச்சில்ல நயன்தாரா அவங்க அம்மா வீட்டுக்கு போயிருப்பாங்களா? வைரல் மீம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஆசையாய் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இரு நாட்களில் தாய்லாந்து ஹனிமூன் சென்று ஒரு வாரமாக நாட்களை கழித்தனர்.
அதன்பின் நயன் தாரா ஜவான் படத்தின் படப்பிடிப்பிலும் விக்னேஷ் சிவன் அடுத்த பட வேலைகளிலும் கவனம் செலுத்த துவங்கினார். இடையில் தன் கணவரை பார்க்க மும்பையில் இருந்து வார இறுதியில் பார்த்துவிட்டு சென்று வருகிறார் நயன் தாரா.
இந்நிலையில் இந்த மாதம் ஆடி மாதம் ஆரம்பித்துள்ளது. இதனை வைத்து, சமீபத்தில் திருமணம் செய்த நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவனை குறித்து தொடர்புப்படுத்தி மீம்ஸ்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
ஆடி மாதம் என்றால் புதுமண தம்பதியினரை சேரவிடாமல் தனித்தனியாக இருக்க வைப்பது வழக்கம்.
அதற்கு காரணம் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்ற காரணமும் கூட. அப்படி இருக்கையில் ஆடி மாதம் ஆரம்பிச்சுடுச்சி நயன் தாரா அவங்க அம்மா விட்டுக்கு சென்றிருப்பாரா என்ற மீம் புகைப்படம் இணையத்தில் வைலராகி வருகிறது.