யார் பட்டத்துக்கும் ஆசைப்படல..சர்ச்சைக்கு இதுதான் காரணம்!! மனம் திறந்த நயன்தாரா..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவைதாண்டி பாலிவுட்டில் கால்பதித்து தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு வந்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தின் வீடியோவை வைத்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விற்று ஆவணப்படமாக சமீபத்தில் வெளியிட்டார் நயன். இதுகுறித்து தனுஷுக்கும் நயன் தாராவுக்கும் பிரச்சனை ஏற்பட வழக்கு வரை சென்றுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில்
இந்நிலையில் நயன் தாரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், என்னுடைய அடுத்த மிகப்பெரிய சர்ச்சையே அதுதான். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்திருக்கிறேன். கடந்த 4, 5 வருடங்களாக டைட்டில் கார்ட் போட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் பலமுறை கூறி இருக்கிறேன்.
அந்த பட்டத்தை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருக்கிறது. பட்டத்தால் எதுவும் நடந்துவிடாது என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் என் ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு, மரியாதை காரணமாக என்னை அப்படி அழைக்கிறார்கள். இரவு முழுவதும் யோசித்து இந்த பட்டத்தை நானாக எனக்கு கொடுங்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை.
யாருடைய பட்டத்திற்கும் நான் ஆசைப்படவில்லை, இது ஒரு சிறிய உலகம், இதில் ரசிகர்களை எந்த வகையிலும் நாம் முட்டாளாக்க முடியாது. நான் சிறந்த நடிகை, சிறந்த டான்சர் என்று எப்போதும் சொல்லிக்கொண்டது இல்லை. ஆனால் இந்த இடத்தில் இருக்கிறேன். இதற்காக கடுமையாக் உழைத்திருக்கிறேன். அதனால் தான் ரசிகர்கள் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திலும் டைட்டில் கார்ட் வரும் போது எனக்கே என்னடா என்று இருக்கும், ஆனால் வெற்றிகரமான பெண்ணை பார்க்கும்போது யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை, ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் நன்றாக தெரிகிறது. மேலும் மூன்று குரங்குகள் எப்போதும் என்னைப்பற்றி தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசிய 50 எபிசோடில் 45 எபிசோட் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள், அப்படி பேசுவதால் வியூஸ் வருகிறது, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுடையை நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமேதான் என்று நயன் தாரா பேசியுள்ளார்.