அத மட்டும் சொல்லாதீங்க, பயங்கரமா திட்றாங்க.. நயன்தாரா ஆதங்கம்

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 09, 2023 04:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் அன்னபூரணி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

அத மட்டும் சொல்லாதீங்க, பயங்கரமா திட்றாங்க.. நயன்தாரா ஆதங்கம் | Nayanthara About Super Star Title

இந்நிலையில் பேட்டிஒன்றில் கலந்துகொண்ட நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். அது சொன்னாலே என்னைத் திட்டுகிறார்கள் இன்னும் நான் அந்த இடத்திற்கு வரவில்லையா அல்லது பெண் என்ற ஒரு காரணத்தினால் அது இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனக்கு தெரியவில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் என்று 10 பேர் பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் 50 பேர் என்னை திட்டுகிறார்கள் என்று நயன்தாரா கூறியுள்ளார்.