இத்தனை கோடியில் காரா!! மனைவி நயன்தாராவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் விக்னேஷ் சிவன்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கரம் பிடித்தார்.
திருமணத்திற்கு பின் பல படங்களில் நடித்து வந்த நயன், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், நடிப்பு மற்றும் போதாது என்று பல தொழில்களை ஆரம்பித்து மகன்களுக்காக சொத்து சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் நடிப்பு, பிசினஸ் என்று பிஸியாக இருந்து போரடித்து போனதால் படங்களை இயக்கவும் முடிவு செய்துள்ளார். இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் அவரது 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.
மனைவிக்காக விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த காரினை பிறந்தநாளுக்கு புக் செய்திருந்தார். தற்போது Mercedes Maybach காரை தன் வீட்டிற்கு புதுவரவாக வந்துள்ளதை இணையத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அந்த காரின் விலை சுமார் 2.5 கோடியில் இருந்து 3.75 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.