பணக்கார நடிகை என்றால் சும்மாவா? ரூ. 100 கோடியில் வீடு, நயன்தாராவுக்கு இருக்கும் சொத்து..

Nayanthara Actress Net worth
By Bhavya Sep 02, 2025 08:30 AM GMT
Report

நயன்தாரா

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

பணக்கார நடிகை என்றால் சும்மாவா? ரூ. 100 கோடியில் வீடு, நயன்தாராவுக்கு இருக்கும் சொத்து.. | Nayanthara Car House Details Goes Viral

இவ்வளவா?  

வெவ்வேறு பிசினஸில் முதலீடு செய்து அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். நயன்தாரா பல்வேறு பிரபல பிராண்டுகளின் சொகுசு கார்கள் கொண்ட ஒரு சிறந்த கார் சேகரிப்பை (car collection) வைத்துள்ளார்.

அதை தொடர்ந்து, சொந்த வீடுகளை வைத்திருக்கிறார். இந்த வீடுகளின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடிக்கு மேல் இருக்கலாம். அதுமட்டுமின்றி, சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

நயன்தாரா, 9 ஸ்கின் என்ற சரும பராமரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

பணக்கார நடிகை என்றால் சும்மாவா? ரூ. 100 கோடியில் வீடு, நயன்தாராவுக்கு இருக்கும் சொத்து.. | Nayanthara Car House Details Goes Viral