மாமியாருக்கே முத்தம் கொடுத்து ஐஸ் வைத்த நயன்தாரா? காதலுக்காக இதைக்கூட செய்ய மாட்டாரா?

Nayanthara Vignesh Shivan
By Edward May 09, 2022 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. பிஸி நடிகையாக இருக்கும் நயன் சமீபத்தில் நானும் ரெளடிதான் படத்திற்கு பிறகு ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்.

படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு வசூலை பெற்று வருகிறது. விக்கிக்கும் நயனுக்குன் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தி இணையத்தில் கசிந்து வருகிறது.

இதேபோல் காத்துவாக்குல ரெண்டுகாதல் படத்தின் வெற்றியால் நயன் தாரா விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று அன்னையர் தினம் என்பதால் உலகம் முழுவதிம் கொண்டாடினர்.

விக்னேஷ் சிவனும் தன் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன் தாரா தன் வருங்கால கணவருடன் இணைந்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இப்பவே முத்தம் கொடுத்து ஐஸ் வெச்சீங்களா மேடம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.