முன்னணி நடிகரின் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. வற்புறுத்தி செய்யவைத்த பிரபலம்

Nayanthara Yogi Babu
By Kathick Jul 08, 2025 03:30 AM GMT
Report

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் முக்கிய புள்ளிகளில் ஒருவர். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் தனி இடத்தை சம்பாதித்துள்ளார்.

முன்னணி நடிகரின் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. வற்புறுத்தி செய்யவைத்த பிரபலம் | Nayanthara Feet On Yogi Babu Face In Movie

அப்படி அவர் சோலோ ஹீரோயினாக நடித்து மாபெரும் ஹிட்டான திரைப்படம்தான் கோலமாவு கோகிலா. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு நடித்திருப்பார். இப்படத்தில் நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிக்கும் நபராக அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கோலமாவு கோகிலா படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை யோகி பாபு பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் நயன்தாரா உடன் நடித்த அனுபவம் குறித்து யோகி பாபு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது, நயன்தாரா நிஜத்திலேயே லேடி சூப்பர்ஸ்டார் தான் என அவர் பாராட்டி இருக்கிறார்.

முன்னணி நடிகரின் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. வற்புறுத்தி செய்யவைத்த பிரபலம் | Nayanthara Feet On Yogi Babu Face In Movie

"ஒரு காட்சியில் எனது முகத்தில் நயன்தாரா கால் வைப்பது போல இருந்து. அந்த காட்சி வேண்டாம் என நயன்தாரா கூறினார். ஆனால் நெக்லனும் நானும் தான் வற்புறுத்தி நடிக்க சொன்னோம். ஏழு அல்லது எட்டி டேக் சென்றது. ஆனால் ஒரு முறை கூட நயன்தாரா காலை என் முகத்தில் வைக்கவில்லை.

என் முகத்தில் அழுக்கு பட கூடாது என்பதற்காக, தனது கால்களை நன்றாக சுத்தம் செய்துகொண்டார். அதன்பின் அவர் காலை கீழே தரையில் வைக்காமல் தூக்கியே வைத்திருந்தார். இறுதியாக டேக் ஓகே ஆனது" என யோகி பாபு கூறியுள்ளார். 

முன்னணி நடிகரின் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. வற்புறுத்தி செய்யவைத்த பிரபலம் | Nayanthara Feet On Yogi Babu Face In Movie