ரகசியமாக திருமணத்தை முடித்த நயன்தாரா.. ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ

marraige nayanthara vignesh shivan
By Kathick Mar 12, 2022 11:20 AM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். தங்களுக்கு நிச்சயதாத்தம் நடந்துமுடிந்ததாக நயன்தாரா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிரபல கோவில் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட வெளிவந்தது.

ஏற்கனவே தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று, நயன்தாரா கூறியுள்ள நிலையில், மீண்டும் எப்படி தற்போது இரண்டாவது நிச்சையாதார்தம் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதையெல்லாம் விட, நயன்தாரா நெற்றியில் திருமணமான பெண்கள் வைத்திருப்பதுபோல் குங்குமம் வைத்திருக்கிறார். இதனால், விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் தற்போது திருமணம் தான் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை நயன்தாரா, இப்படியா ஒரு ரகசிய திருமணத்தை செய்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டார்கள்.