வருங்கால மனைவி தயாரிப்பில் கோடியில் சம்பளம் வாங்கிய விக்னேஷ் சிவன்! திருமண பரிசாமே?

Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

நடிகர் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படம் போடா போடி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். கதையாசிரியர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.

நடிகை நயன் தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடி தான் படத்தினை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இப்படத்தின் வெற்றிக்கு பரிசாக நயன் தாராவின் காதலராகினார். இருவரும் ஜோடியாக செல்வதும் வெளிநாட்டுக்கு பறப்பதுமாக கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் சமந்தா, நயன் தாரா, விஜய் சேதிபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய கதையை எடுத்து வெளியிட்டார். நயன் தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் ரெளடி பிச்சர்ஸ் தயாரித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 30 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.

இந்நிலையில் தங்களின் தயாரிப்பு நிறுவனமே அதுவும் காதலி ஷேரில் அவருக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தொகையை வைத்து தான் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த கார் ஒன்றினை வாங்கி இருக்கிறாராம். வரும் ஜூன் 9 ஆம் தேதி நயனுக்கு விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகும் நிலையில் இருவரும் தங்களின் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.