திருமணத்திற்கு பின் பல பிரச்சனை.. 20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா

Nayanthara Vignesh Shivan
By Kathick Feb 28, 2023 07:05 AM GMT
Report

நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு பின் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். முதலில் இரட்டை குழந்தைகள் மூலம் பிரச்சனை எழுந்தது, பின் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மூன்றாவது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பட வாய்ப்பும் தவறிப்போனது.இப்படி நயன்தாராவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொன்டே இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு பின் பல பிரச்சனை.. 20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா | Nayanthara Had So Many Problems

இந்நிலையில், புதிதாக மற்றொரு பெரிய வாய்ப்பு நயன்தாராவின் கைநழுவிபோய்யுள்ளது. நயன்தாரா பிரபல தயாரிப்பாளரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக கமிட்டாகி இருந்தார். ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின் பல பிரச்சனை.. 20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா | Nayanthara Had So Many Problems

ஆனால், அந்த இரண்டு படத்திற்கும் நயன்தாராவால் தற்போது கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்துள்ளது. இதனால், நயன்தாராவை இப்படத்திலிருந்து விலக்கிவிட்டு, தான் கொடுத்த முன் தொகையையும் அந்த தயாரிப்பாளர் திரும்ப பெற்றுக்கொண்டாராம். இந்த இரண்டு படங்கள் கைநழுவிப்போனதினால் ரூ. 20 கோடி சம்பளத்தை இழந்துள்ளார் நயன். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.