தந்தைக்காக நயன் தாரா எடுக்கப்போகும் முடிவு? ஹாப்பி மூடில் விக்னேஷ் சிவன்..

ladysuperstar nayanthara vigneshshivan tamilactress
By Edward Apr 05, 2022 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நயன் தாரா. அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்தார். நயன் தாரா சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த படம் சந்திரமுகி, கஜினி போன்ற படங்கள். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

அதன்பின் பல தோல்விகள், காதல் ஏமாற்றங்களை தாண்டி லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த்து டாப் முதல் இடத்தில் இருந்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து வரும் நடிகை நயன் தாரா தற்போது தான் காதலித்து வரும் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக காத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவனுடன் பல ஆண்டுகள் காதலில் இருந்து வரும் நயன் தாரா, எப்போது அவரை திருமணம் செய்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவரது தந்தை பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

13 ஆண்டுகளாக நயன் தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்காக விக்னேஷ் சிவனை கூடி சீக்கிரமே திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் நயன் தாரா. இதை அறிந்த ரசிகர்கள் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க விக்கி என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.