நயன் தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாததற்கு இது தான் காரணமா?

marriage ladysuperstar nayanthara viigneshshivan
By Edward Mar 03, 2022 02:29 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். காதல் இயக்குனரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸிற்காக காத்து வருகிறது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் இருவரும் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு பதிலளிக்காமலே இருந்து வருகிறார்கள். அதற்கு காரணம் என்ன என்ற செய்தி இணையத்தில் லீக்காகி பரவி வருகிறது.

நயன் தாரா திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றெடுக்கவுள்ளாராம். அதற்காகத்தான் விக்னேஷ் சிவனை காத்திருக்க வைக்கிறாராம். அப்படி இருக்கையில் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டாமே என்று விக்னேஷ் சிவனை நயன் தாரா ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இது உண்மையா பொய்யா என்று தெரியாத புதிராக இருக்கிறது.