திருமணத்திற்கு பின் மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா.. எங்கே தெரியுமா
சிம்பு - நயன்தாரா
நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா முன்னாள் காதலர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் இருவரும் வல்லவன் படத்தில் நடித்தபோது தீவிரமாக காதலிக்க தொடங்கி பின் சில காரணத்தினால் பிரிந்து விட்டனர்.
காதல் முறிவுக்கு பின்பும் இருவரும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்திருந்தனர். அதன் பின், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா.
திருமணத்திற்கு பின் நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதில்லை.
எங்கே தெரியுமா
இந்நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க டிராகன் திரைப்படம் தயாராகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கம் இந்த படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நாளை படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிம்பு மற்றும் நயன்தாரா கலந்துகொள்கின்றனர். அதாவது இவர்கள் 9 வருடங்களுக்கு பிறகு ஒரே பிரேமில் வரப்போகிறார்கள்.