நயன்தாரா பெயருக்கு இப்படிபட்ட அர்த்தம் இருக்கா? இது அவருக்கு தெரியுமா!!

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 21, 2022 06:10 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. 7 வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார். எப்போது திருமணம் நடக்கும் என்று பலரால் கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.

நயன்தாரா பெயருக்கு இப்படிபட்ட அர்த்தம் இருக்கா? இது அவருக்கு தெரியுமா!! | Nayanthara Name Full Meaning Viral After 7 Years

நயன்தாரா கல்யாணம்

தற்போது அவரது திருமண வாழ்க்கையை பற்றி தான் அதிகமான செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட முறையில் மகாபலிபுரம் ரெசாட்டில் நடைபெற்ற நயன் - விக்கி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, அனிருத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையேடு தன் அம்மாவிடம் ஆசி பெற கேரளா கொச்சினில் இருக்கும் அம்மா வீட்டிற்கு கணவருடன் சென்றார்.

நயன்தாரா பெயருக்கு இப்படிபட்ட அர்த்தம் இருக்கா? இது அவருக்கு தெரியுமா!! | Nayanthara Name Full Meaning Viral After 7 Years

ஹனிமூனில் ரொமான்ஸ்

அங்குள்ள சில கோவில்களுக்கும் சென்ற நயன் - விக்கி புகைப்படங்கள் வெளியானது. ஹனிமூன் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எழுந்த நிலையில் கணவர் விக்னேஷுடன் தாய்லாந்து சென்றுள்ளார் நயன் தாரா. தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களையும் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா பெயருக்கு இதுதான் அர்த்தம்

இந்நிலையில் நயன்தாராவின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கவிஞர் 2015ல் விவரித்துள்ளார். 7 வருடங்களுக்கு பிறகு இந்த பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நயன்தாரா - நயன் என்றால் கண். தாரா என்றால் (தாரகை) நட்சத்திரம். நயன் தாராவின் பெயரை தமிழ்ப்படுத்தினால் உடுக்கண்ணி என்ற அர்த்தமாகும் என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். இதற்கு பலர் இந்த அர்த்தம் நயன் தாராவுக்கு தெரியுமா என்று கூறி வருகிறார்கள்.

Gallery