அந்த விஷயத்துக்கு நோ சொன்ன நயன் தாரா! காதலன் படத்துக்கே இப்படி செய்றியேமா?

Vijay Sethupathi Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward Apr 25, 2022 06:34 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகை நயன் தாரா, சமந்தா இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நயன் தாராவின் வருங்கால கணவர்  விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படம் வரும் 28 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை நயன் தாரா விக்னேஷ் சிவனின் ரெளடி பிச்சர்ஸ் தான் தயாரித்துள்ளது. எப்போது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நோ கூறி வரும் நயன் தாரா தன்னுடைய தயாரிப்பு படங்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து வருகிறது.

இதனால் நயன் தாரா தன்னுடைய படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளாராம். சிறப்பு பேட்டிகளில் கூட விஜய் சேதுபது விக்னேஷ் சிவன் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஏன் பிரமோஷன் என்று அவரது ரசிகர்களும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.