நயன்தாரா இப்படிலாம் பண்லாமா? உங்க படத்திற்கு மட்டும் இப்படியா! கோபத்தில் விமர்சிக்கும் ரசிகர்கள்

nayanthara vigneshshivan netrikann
By Edward Aug 04, 2021 07:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அப்படத்தின் பிரமோஷனுக்காக நயன் தாரா சென்றுள்ள புகைப்படம் வைரலாகியது. அந்நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒளிப்பரப்பாக இருப்பதாகவும் தொகுப்பாளினி டிடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளாராம். அதன் புகைப்படத்தை பார்த்த சிலரும் மற்ற தயாரிப்பாளர்கள் படம் என்றால் பிரமோஷனுக்கு வரமுடியாமல் இருப்பது, அவர் தயாரிக்கும் படம் என்பதால் பிரமோஷனுக்கு செல்கிறாரே என்று விமர்சித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery