கோவிலில் கணவருடன் நயன்தாரா போட்டோஷூட்.. சர்ச்சையில் சிக்கிய புதிய தம்பதி
Nayanthara
Vignesh Shivan
By Karthick Raja
நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு இன்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமலை திருப்பதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரையும் போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், நயன்தாரா திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் இருந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறியுள்ளாராம். இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.