நெத்தியில் நச்சுன்னு முத்தம் கொடுத்த கணவர்!! நடிகை நயன்தாரா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்..
நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார்.
சமீபத்தில் தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார்.
39 வயதை எட்டிய நடிகை நயன் தாரா ஜூலை 12 ஆம் தேதி நடந்த அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் ட்ரடிஸ்னல் லுக்கில் சென்றுள்ளனர்.
கோல்டன் சேலையில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் நெற்றியில் விக்னேஷ் சிவன் நச்சென்று முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நயன் தாரா.





