நயன்தாரா நார்மல் மனிதர் கிடையாதா? கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ
நயன்தாரா
இன்று தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், நயன்தாரா. தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா கடந்த ஆண்டு அவர் தொடங்கிய பெமி 9 என்ற நாப்கின் நிறுவனம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாக கூறப்பட்டு பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும், அங்கு கூட்டம் அல மோதியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்
அவர், " நயன்தாரா மேடம் நமக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இங்க வந்திருக்காங்க, சொல்றதை கேளுங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. அவங்க நம்மள போல நார்மல் பீப்பள் கிடையாது என பேசி கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து நயன்தாரா நார்மல் மனுஷி கிடையாதா? என ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
Avanga “Normal People” illa😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 15, 2025
Ennaya Solra??? pic.twitter.com/edUEGA4Hq6