விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம்.. எல்லாரும் அப்படி சொன்னாங்க...ஆனா!! நயன்தாரா ஓபன் டாக்..
நயன்தாரா
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் நடிகையாக மாறி தொடர்ச்சியான வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டிலும் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா.
ஆரம்பத்தில் பல காதல் தோல்விகளை சந்தித்த நயன், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு தாயாகினார்.

தற்போது படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர், குழந்தைகளுக்கும் நேரத்தை செலுத்தி வருகிறார். சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர் நயன் தாரா தனக்கு வேண்டும் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து நயன்தாரா குறித்த சில விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நயன் தாரா ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடனமாடியது குறித்து பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம்
அதில் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடலாம் என்று நான் முடிவு செய்தபோது எல்லோரும் என்னிடம் வந்து, ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்? தொடர்ந்து இனிமேல் அதற்கு மட்டும்தான் அழைப்பார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் நானோ ஸ்பெஷல் பாடல் என்றால் ஸ்பெஷல் விஷயம் தானே, ஏதோ ஒரு இமேஜ் இருப்பதால் மட்டும்தானே என்னை அழைப்பார்கள். அதன்மூலமும் சில விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். நான் ஆடிய இரண்டு பாடல்களுமே எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது என்று நயன் தாரா பகிர்ந்துள்ளார்.