பழிவாங்க துடிக்கும் நயன்தாரா!! கணவரை நம்பி மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கப்போகும் லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா நடிப்பில் சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் ஓடவில்லை. அதேபோல் கமிட்டாகிய படத்தில் இருந்து விலகியதால் பல கோடியை இழந்திருக்கிறார்.
அஜித்குமாரின் 62
அதேபோல் விக்னேஷ் சிவனுடம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் நடிகர் அஜித்குமாரின் 62வது படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால் கதை விசயத்தில் ஏமாற்றியதால் விக்னேஷ் சிவனை லைக்கா நிறுவனத்திடம் கூறி நீக்கியிருக்கிறார் அஜித். இதன்பின் ஏகே62 படத்தினை மகிழ்திருமேனி இயக்க கமிட்டாக்கி விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடியை அவமானப்படுத்தினர்.

இந்த ஆதங்கத்தினை இணையத்தில் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை கூறி விக்னேஷ் சிவன் புலம்பி வருகிறார். இதற்கு எப்படியாவது பழித்தீர்க்க விக்கி - நயன் தீராத யோசனையில் இருந்து வந்துள்ளனர். இதற்காக நயன், விக்னேஷ் சிவனிடம் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம். இடையில் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைவைத்து பக்கா பிளான் போட்டுள்ள விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து சூப்பர் கதையை இயக்கவுள்ளாராம்.
பழிவாங்க துடிக்கும் நயன்தாரா
இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரம் இருப்பதால் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். நானே நடிக்கிறேன் என்று நயன் தாராவே கூறியிருக்கிறாராம்.
இப்படியொரு ரிஸ்க் எடுக்க, இருவர் மீதும் நம்பிக்கை வைத்து தான் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நயன் தாரா. விக்னேஷ் சிவனின் கேரியர் வெற்றியடைய மிகப்பெரிய வெற்றிப்படம் தேவை என்பதாலும் நயன் தாரா துணிந்து இதை செய்யவுள்ளாராம்.