மேடையில் நடிகை ஸ்ரீலீலாவை ஓரமாக நிற்கச்சொன்ன முதல்வர் மனைவி!! ஆவேசமாகும் ரசிகர்கள்..

Maharashtra Mumbai Sreeleela
By Jai Jun 24, 2026 11:30 AM GMT
Report

தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி படம் வெளிவந்தது.

மேடையில் நடிகை ஸ்ரீலீலாவை ஓரமாக நிற்கச்சொன்ன முதல்வர் மனைவி!! ஆவேசமாகும் ரசிகர்கள்.. | Cm Wife Amrutha Insults Actress Sreeleela Sparks

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மும்பையில் பிரமாண்டமான பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸின் மனைவியும் அவரது மகள் திவிஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீலீலாவும் கலந்து கொண்டார். அப்போது போட்டோகிராபர்களில் ஒருவர் அம்ருதா பட்னாவிஸ், அவரது மகளை மட்டும் தனியாக போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டார்.

மேடையில் நடிகை ஸ்ரீலீலாவை ஓரமாக நிற்கச்சொன்ன முதல்வர் மனைவி!! ஆவேசமாகும் ரசிகர்கள்.. | Cm Wife Amrutha Insults Actress Sreeleela Sparks

உடனே அம்ருதா, ஸ்ரீலீலாவை தள்ளி நிற்கும்படி கேட்டார். இதனால் முகமாறிய ஸ்ரீலீலா வாடிய நிலையில் அங்கிருந்து கிளம்பினார்.

அதன்பின் அம்ருதா, திவிஜா மட்டும் போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ஸ்ரீலீலாவை முதல்வர் மனைவி அவமானப்படுத்திவிட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.