அந்த இடத்தில் இப்படியொரு டேட்டுவா!! நயன்தாராவின் ஹனிமூனை சூம் செய்யும் நெட்டிசன்கள்..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்தார். ஆசை காதலனை கரம் பிடித்த கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்றார்.
அதன்பின் ஒரு வாரம் ஹனிமூனுக்கு பிறகு ஜவான் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்தார். ஒரு மாத வேலைகளுக்கு பின் நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் பறந்தார். அங்குள்ள பார்சிலோனா, வெலன்சியா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
நயன் தாரா அழகை ரசிக்கும் படியான விக்னேஷ் சிவன் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இதில் நயன் தாரா கழுத்துப்பகுதியில் போட்டிருந்த டேட்டூவை கவனித்த நெட்டிசன்கள் சூம் செய்து பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே கழுத்தின் பின்பக்கம் போட்டிருக்கப்பட்ட டேட்டூவை தற்போது பார்த்து ரசித்து வருகிறார்கள்