72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா.. இருவரையும் மீண்டும் இணைத்த பிரபலம்
நடிகை நயன்தாரா ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் குடும்ப வாழ்க்கை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட தனது மகன் தன்னிடம் சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரு திரைப்படங்கள் உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் நயன் முடித்துவிட்டார். இந்த சூழலில் நயன்தாராவின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 72 வயதிலும் இளம் ஹீரோ போல் மலையாளத்தில் கலக்கிக்கொண்டு இருப்பவர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் நயன்.
இப்படத்தை தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படங்களை இயக்கி சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கவுள்ளாராம்.
மம்மூட்டி மற்றும் நயன்தாரா இதற்கு முன் மலையாளத்தில் சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.